அனுராதபுரம் செல்கிறார் மோடி!
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_646.html
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை இலங்கையின் தலைநகராக விளங்கியதோடு பல வருடங்களாக தேரவாத பௌத்தத்தின் மையப்பகுதியாகவும் காணப்பட்டது. அசோக மன்னனின் மகன் மகேந்திர, பௌத்தம் குறித்து இரு உரைகளை நிகழ்த்திய நகரமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பௌத்த பாரம்பரியம் காணப்படுவதை உலகிற்கு உணர்த்தும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் படியே அனுராபுரத்திற்கான இந்த விஜயம் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இது மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும் பௌத்த பாரம்பரியத்தினை கொண்டிருக்கும் தென்னாசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மென்சக்தியை ஊக்குவிக்க உதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


