தீவிரவாதத் தாக்குதல் அச்சம் காரணமாக ஜெர்மனிய திருவிழா ரத்து
ஜெர்மனியின் வடபகுதியில் உள்ள ப்ரௌன்ஷ்விக் நகரில் நடைபெறும் வருடாந்திர திருவிழா தொடங்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_465.html
ஜெர்மனியின் வடபகுதியில் உள்ள ப்ரௌன்ஷ்விக் நகரில் நடைபெறும் வருடாந்திர திருவிழா தொடங்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடண் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல்
அந்தத் திருவிழாவின்போது நடைபெறவிருந்த பேரணிக்கான பாதையை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியில் வடபகுதியில் நடைபெறும் மிகப்பெரியத் திருவிழா இந்த ப்ரௌன்ஷ்விக் பேரணியாகும். இதைக் காண ஆண்டுதோறும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் கூடுவார்கள்.
இதேவேளை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜெர்மனி-டென்மார்க் எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

