மகிந்த குடும்பத்தாரின் தொலைக்காட்சிக்கு கடும் நெருக்கடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களது தொலைக்காட்சி சேவை மீது புதிய அரசாங்கம் கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்ற...




download


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களது தொலைக்காட்சி சேவை மீது புதிய அரசாங்கம் கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களான யோசித மற்றும் நாமல் ராஜபக்ஸவினால் சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவை நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசையாக இந்த சேவை இயங்கி வருகின்றது.

இந்த அலைவரிசையின் மீது பாரியளவில் வரிகளை புதிய அரசாங்கம் விதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக நிதி அமைச்சர் இடைக்கால வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பின் போது தெரிவித்திருந்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு உரிய பங்களிப்பினை வழங்காது அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது வரி விதிக்கப்படும் என இ;ன்றைய தினம் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி வரிகளையோ மின்சாரக் கட்டணத்தையோ செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதியாண்டில் 2000 மில்லியன் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களிமிருந்து 25 வீத வருமானம் வரியாக அறவீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி நேரடி ஒளிபரப்பு உரிமை இறுதி நேரத்தில் சீ.எஸ்.என் அலைவரிசையிடமிருந்து பறி போயுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினால் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

Related

இலங்கை 1153148973970586893

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item