ராஜபக்ஷக்களின் சொத்துக் குவிப்பு! இந்தியாவில் அம்பலப்படுத்தினார் மைத்திரி!

ராஜபக்ஷ குடும்பத்தினரால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம் குறித்த விபரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பலப்படு...

ராஜபக்ஷ குடும்பத்தினரால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம் குறித்த விபரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பலப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த போது இது குறித்த தகவல்களை இந்திய அதிகாரிகளுடன் மைத்திரி பகிர்ந்து கொண்டுள்ளார்.
 வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து விசாரிப்பதற்காக நிதி புலனாய்வு பிரிவொன்றை அமைப்பதற்காக இந்தியாவின் உதவி நாடப்படவுள்ளது.
 சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் மார்ட்டின் தீவுகள், சீஷெல்ஸ், ஹொங்கொங், போன்ற இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்து தொடர்பான தகவல்களை இந்தியா அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
 ராஜபக்ச குடும்பத்தினர் டுபாய், உகன்டா மற்றும் கென்யாவில் அடுக்குமாடி வீடுகளை அமைப்பதில் பெருமளவு பணத்தினை முதலீடு செய்துள்ளதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
 முன்னைய ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து தனது அரசாங்கம் மிகவும் உறுதியாக இருக்கிறது. இது குறித்த விசாரணைகளுக்காக தனது அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளது.
 ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 இதேவேளை, முன்னைய அரசாங்கம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ளதாக சிறிசேன அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஊழல்கள் மற்றும் காணி பரிமாற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை துரித செயலணியொன்றை அமைத்துள்ளது. ஆனால் ராஜபக்சாக்கள் இது வரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கவில்லை.

Related

இலங்கை 99541598074423995

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item