இலங்கை- நியூசிலாந்து அணிகள் இடையிலேயான 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. க்ரைஸ்ட்சர்ச் நகர...

இலங்கை- நியூசிலாந்து அணிகள் இடையிலேயான 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிரண்டன் மெக்குலம் 65 ரன்களும், கேன் வில்லியம்சன் 57 ரன்களும் கோரி ஆண்டர்சன் 75 ரன்களும் எடுத்தனர். 332 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.