ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிற்கு ரெயில்பாதை அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்பாகிஸ்தான்…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிற்கு ரெயில்பாதை அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு ரய...

news_24-02-2015_36china_pakistan
ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிற்கு ரெயில்பாதை அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு ரயில் பாதையை அமைப்பது தொடர்பான சீனாவின் திட்டத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கார் நகரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் துறைமுக நகரான குவாதார் வரையில் ரெயில் பாதையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1,800 கி.மீ. தூர ரெயில் பாதை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி வழியாக அமைக்கப்படவுள்ளது. அரபிக் கடலில் உள்ள குவாதார் துறைமுகத்தில் இருந்து சீனாவிற்கு சாலை வசதியும் செய்யப்பட்டுகிறது. அனைத்து போக்குவரத்து நெட்வோர்க்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஏற்பட உள்ளது.

சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை, பாகிஸ்தானின் மிகப்பெரிய ரெயில் பாதை மற்றும் சாலை போக்குவரத்து ஆகும். இதற்கான பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார பாதையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்க பாகிஸ்தான் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் குவாதார் துறைமுகம் – சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் ஆகியவறை ரெயில் பாதைகள், பைப் லைன்கள் மூலம் இணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது உருவாக்கப்படஉள்ள இப்பாதைகள் சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே பொருளாதரத்திற்கு பெரும் கேட்வே வசதியாக அமையும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக போக்குவரத்து நெட்வோர்க்கை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக போக்குவரத்து நெட்வோர்க்கை அமைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா தனது கருத்தை பதிவு செய்தது. ஆனால் சீனா போக்குவரத்து நெட்வோர்க் அமைப்பது பிராந்திய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று அதற்கு ஆதரவாக பேசியது. பாகிஸ்தான் அமைச்சரவை நேற்றை அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான பொருளாதார ஒத்துழைப்பு விவகாரத்திலும் பாகிஸ்தான் முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது

Related

உலகம் 6293018531909896879

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item