’58 லட்சம் வாக்குகள்’ மஹிந்த எனும் தனி மனிதனுடையவை அல்ல: நிமல் சிறிபால டிசில்வா
மஹிந்தவுக்கு வாக்களித்த 5.8 மில்லியன் மக்களும் நுகேகொட சந்தியில் 18ம் திகதி கூடுங்கள், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் எனும...
https://kandyskynews.blogspot.com/2015/02/58.html
இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கூட்டணியையும் தரக்குறைவாக்கும் பிரச்சாரம் என சுட்டிக்காட்டியுள்ள அவர், மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரிப்பதற்கு முய்சி செய்வார் என தான் நம்பவில்லையெனவும் அவரும் இக்கட்சியின் தயாரிப்பே. எனவே, மற்றவர்கள் பேச்சைக் கேட்டு கட்சியைப் பிரிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபடமாட்டார் என தான் நம்புவதாகவும் இன்று டெய்லி நியுஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விமல் – வாசுதேவ மற்றும் கம்மன்பில கூட்டணி மஹிந்த ராஜபக்சவை தனியாக ஒரு கட்சி சார்பாகவேனும் தேர்தலில் போட்டியிட வைப்பதில் மும்முரமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


