மகிந்தவின் சோதிடர் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்தவை முன்க...

mahinda_sumanadasa

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து, அவர் படுகுழியில் விழக் காரணமானவர் அவரது சோதிடரே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் நாளை நிர்ணயித்து, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்தது, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தது என எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்சவின் சோதிடரான சுமணதாசவே மேற்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த 8 ஆம் திகதி மிகவும் நல்ல நேரம் என்றும், அது அவருக்கு இராஜயோகத்தை அளிக்கும் என்றும் நம்பிக்கை ஊட்டிய அவரை, மேற்குலக ஊடகங்கள் பலவும், இராஜ சோதிடர் என்றே குறிப்பிட்டன.

இவரது பேச்சை நம்பி, மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தனது பதவியை இழந்துள்ளதையடுத்து. சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.




Related

இலங்கை 4869939099432627279

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item