மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டும் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் பிரதம நீதியரசர்  மொஹான் பீரிஸ்  பதவி விலக வேண்டும் என கோரி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்  ஒன்றில் ஈடுபாட்டுள்ளனர் , கொழும்பு உயர் நீ...

இலங்கையின் பிரதம நீதியரசர்  மொஹான் பீரிஸ்  பதவி விலக வேண்டும் என கோரி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்  ஒன்றில் ஈடுபாட்டுள்ளனர் , கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் இடம்பெறுகிறது

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 வரையான சட்டத்தரணிகளும் பொது மக்களும் கலந்துகொண்டுள்ளனர் .

அதேவேளை இலங்கையின் பிரதம நீதியரசர்  மொஹான் பீரிஸ் பதவிவிலக வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் பதவி நீக்கப்பட்ட 43வது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரிய தெரிவித்தார்

சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.அதேவேளை சிராணி பண்டாரநாயக்க தற்போதும் இலங்கையின் பிரதம நீதியரசர் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது

சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மட்டுமன்றி, இது தொடர்பில் கூட்டப்பட்ட சிறப்பு பொதுச் சபையும் சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றே கோரியுள்ளதாகவும் வழக்கறிஞர் உப்புல் ஜயசூரிய கூறியுள்ளார்.

அதேவேளைஇ ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகிந்த ராஜபக்ச இராணுவத்தைக் கொண்டு தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க திட்டம் தீட்டியதாகவும் அந்த சதித்திட்டத்தில்  பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கும் பங்கு உண்டு என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

மக்களின் தீர்ப்புக்கு எதிராக பலவிதமான சதித்திட்டங்கள் போடுவதற்கு எத்தனிக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் நாட்டின் நீதியின் காவலனாக இருக்க வேண்டியவர் அங்கு பிரசன்னமாகி இருந்தார் என ரட்ணவேல் மேலும் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில்இ தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகள் ஒன்றியமும் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்துள்ளார்

Related

இலங்கை 6144512564711914012

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item