ஐ.தே.க ஆதரவாளர் சாவு ; முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவரை எதிர...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_593.html
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதிமன்ற நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா உத்தரவிட்டார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்காக கடந்த 5ஆம் திகதி கஹவத்தையில் ஏற்ப்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மின்சக்தி பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, கஹத்தை பிரதேச சபை தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றம் செல்ல வேண்டியுள்ளதால் அவரை கொழும்பு மகசின் சிறைக்கு மாற்றுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், அவரை கொழும்பு மகசின் சிறைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான சாந்த தொடங்கொட உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=503673823721892433#sthash.iZ1gJKBE.dpuf

