இந்தியப் பிரதமரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு!
இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று ...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_161.html
இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திங்கட்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டது. அத்தோடு, இலங்கைக்கு வருமாறு நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, மார்ச் முதல் வாரத்தில் நரேந்திர மோடி, இலங்கைக்கு முதல் முறையாக விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், மங்கள சமரவீரவின் இந்திய விஜயம் முக்கியத்துடன் நோக்கப்படுகின்றது.