புதிதாக வருவோருக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் 24 மணித்தியாலயத்தினுள் கட்சியை விட்டு விலகுவேன் - ஹரின்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது அரசில் இணையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அ...
https://kandyskynews.blogspot.com/2015/01/24.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது அரசில் இணையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து விலகுவேனென ஹரின் பெர்ணான்டோ எச்சரித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி முரளிதரன், உதித்த லொக்குபண்டார, அனுர விதானகமகே ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றதன் பின்னர் தற்போதைய அரசில் இணைந்துகொண்டுள்ளனர்.
இவ்வாறு இணைந்து கொண்டுள்ளவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் ஐ.தே.கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலக போவதாக ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

