பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த
என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அதற்கு பின்னர் நான் பார்த்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான முறையில...


தலதா மாளிகைக்கு இன்று மதவழிபாடுகளை மேற்கொள்ள சென்ற வேளை அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து நான் அன்றைய தினம் பார்த்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் வேட்பாளர் அனுமதி வழங்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிரடியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.