சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துமாறு மகிந்த உத்தரவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக...

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் வைத்து சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும், மஹிந்த ராஜபக்ஸவின் அணியில் முக்கியத்துவம் பெற்று விளங்குபவருமான சத்தாருக்கே இந்த உத்தரவை மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளார். இதன்போது முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதரும் உடனிருந்துள்ளார்.
இதுகுறித்து சத்தார் கூறுகையில்,

மஹிந்த அணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகளவு முஸ்லிம்கள் என்னுடன் தொடர்கொண்டு வருகின்றனர். சட்டத்துறை சார்ந்தவர்கள், தொழில் அதிபர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட முஸ்லிம் தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ அணியில் போட்டியிட இம்முறை விருப்பம் கொண்டுள்ளனர். அதற்காக என்னுடன் தினமும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் செல்வாக்குள்ள, மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யக்கூடியவர்களுக்கு அம்முறை மஹிந்த அணியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

தற்போதும் மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுடன் ஆர்வத்துடன் செயற்படுகிறார். என்னை காணும் போதெல்லாம் ‘ ஏன் முஸ்லிம்கள் எனக்கு, இப்படிச் செய்தார்கள்’ என கேட்கிறார். முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்ய தாம் காத்திருப்பதாகவும் கூறுகிறார். நல்லாட்சி என்றுகூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் தொடர்பில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஏமாந்துவிட்டனர்.

நகர அபிவிருத்திக்கு பொறுப்பாக அமைச்சர் ஹக்கீம் இருக்கின்ற போதிலும் அவரால் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. றிசாத் பதியுதீன் மன்னார் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை. பொதுபல சேனாவின் இனவாதச் செயற்பாடுகளுக்கு மைத்திரியோ ரணிலோ தடை போடவில்லை.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஸவை நாட்டின் பிரதமராக்க இந்தநாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர். இதில் முஸ்லிம்களும் பங்காளர்களாக இணைந்துகொள்ள வேண்டும். புலிப் பயங்கரவதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு மக்கள் உள்ளிட்ட சகலரும் நிம்மதியாக வாழச்செய்தவர் மஹிந்தவே ஆகும் எனவும் சத்தார் மேலும் தெரிவித்தார்.

Related

ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலில் துஆப்பிரார்த்தனையில் (Photo)

பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் நியமனப் பத்திரம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலிலுக்கு ...

மஹிந்தவை மட்டுமல்ல; மைத்திரி அரசையும் வீழ்த்துவதே எமது மிகப்பெரிய இலக்கு: JVP

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கிவிட்டார். மஹிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டு மைத்திரியின் உண்மை முகத்தை வெளிப்படுத்திவிட்டார் என மக்கள் விடு...

கொழும்பில் சலசலப்பு! இன்று மௌனம் கலைக்கும் மைத்திரி

அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் ஏற்பட்டிருந்த குழப்பகரமான நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், ஐக்க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item