ராஜபக்ச குடும்பம் எந்தத் திருட்டு வேலையும் செய்ததில்லை: பசில்
ராஜபக்ச குடும்பம் இது வரை எந்தத் திருட்டு வேலையிலும் ஈடுபட்டதில்லையெனவும் இனியும் ஈடுபடப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் பொருள...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_858.html

ராஜபக்ச குடும்பம் இது வரை எந்தத் திருட்டு வேலையிலும் ஈடுபட்டதில்லையெனவும் இனியும் ஈடுபடப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் பொருளாதார அமைச்சரும் மஹிந்தவின் தோல்வி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டப்பட்டுள்ளவருமான பசில் ராஜபக்ச.
இன்றைய தினம் நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மைத்ரி அரசு முன்வைத்துள்ள எந்தவொரு குற்றச்சாட்டும் ஒரு நாளும் நிரூபிக்கப் படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளதுடன் மீண்டும் அரசமைப்பது உறுதியெனவும் தெரிவித்துள்ளார். எனினும், பசில் ராஜபக்சவிடம் மீண்டும் கட்சியைக் கையளித்தால் கிடைக்க 58 லட்சம் 2 லட்சமாகிவிடும் என அண்மையில் மேல் மாகாண முதல்வர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமையும் தேர்தல் தோல்விக்கு முழுக் காரணமும் அவரே என விமல் வீரவன்ச உட்பட தீவிர மஹிந்த ஆதரவு தரப்பினர் தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate