மன உளைச்சால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் ராஜபக்சே
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழின படுகொலைக்கு காரணமான ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவருக்கு எதிராக தமிழர்கள் வாக்களித்து சிறீசேனாவை...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_70.html?m=0
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழின படுகொலைக்கு காரணமான ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவருக்கு எதிராக தமிழர்கள் வாக்களித்து சிறீசேனாவை வெற்றி பெற செய்தனர். தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.ஆட்சியில் குடும்பத்தினரின் தலையீடு, ஊழல் பணத்தில் சொகுசு வாழ்க்கை, ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார். புதிய அரசின் விசாரணையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தோல்வி அடைந்த பின்பு கொழும்பு அருகே உள்ள தனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் வசித்து வருகிறார். தோல்விக்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். அவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதற்காக விசேஷ மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து முழு ஓய்வு எடுக்குமாறு ஆலோசனை வழங்கினர். இதனால் ராஜபக்சே கொழும்பில் நடந்த இலங்கையின் 67வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு முன்னாள் அதிபர் என்ற முறையில் அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் ராஜபக்சே புறக்கணித்து விட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate