முஸ்லீம் தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, முஸ்லீம் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஐஎஸ்ஐஎஸ் களின் பெருகி வரும...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_11.html?m=0
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, முஸ்லீம் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஐஎஸ்ஐஎஸ் களின் பெருகி வரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை ஒடுக்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுதவிர மேலும் உலகளாவிய பயங்கரவாதம் குறித்தும் மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது ஒபாமா கூறுகையில், ஐஎஸ் அமைப்பை ஒடுக்க வேண்டியது முக்கியமானது. இவர்களையும், பிற அமைப்புகளையும் ஒடுக்க வேண்டியது அவசியம்.
இஸ்லாமின் பெயரால் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது. முஸ்லீம் அமெரிக்கர்கள் அமெரிக்காவுக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.
தொடர்ந்து அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமுதாயம் துணை நிற்க வேண்டும். இந்த சந்திப்பு போல மேலும் பல சந்திப்புகள் ஏற்பட வேண்டும் என்றும் ஒபாமா பேசினார்.
இந்த சந்திப்பின்போது முஸ்லீ்ம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் குறித்தும் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.


Sri Lanka Rupee Exchange Rate