சரத் பொன்சேக்கா நாளை நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம்
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா நாளை (06) மீண்டும் நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அந்தக் க...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_58.html?m=0
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா நாளை (06) மீண்டும் நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைமுன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய பின்னர் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள ‘ஶ்ரீலங்கா மிரர்’ ஊடகவியலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தொலைபேசிக்கு பல முறை அழைப்பை மேற்கொண்ட போதிலும், அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனது.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் இதுகுறித்து ஜயந்த கெட்டகொடவிடம் கேட்டபோது, சரத் பொன்சேக்காவிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிக்கும் வரை எம்.பி. பதவியிலிருந்து விலக முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.(SM)



Sri Lanka Rupee Exchange Rate