நிமல் சிறிபால டிசில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க மறுக்கும் கூட்டணிக் கட்சிகள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் எதிர்க்கட்சித் தலைவராக பா.உ நிமல் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டுள்ள போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_757.html?m=0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் எதிர்க்கட்சித் தலைவராக பா.உ நிமல் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டுள்ள போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஏழு கட்சிகள் அதனை ஏற்க மறுத்து தாம் சுயாதீனமாகவே இயங்க விரும்புவதாகவும் பாராளுமன்றில் தமக்கு கட்சித் தலைவர்கள் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மஹஜன எக்சத் பெரமுன தலைவர் பா.உ தினேஸ் குணவர்தன தலைமையில், முன்னாள் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார, டியு குணசேகர, திஸ்ஸ வித்தாரன, அதாவுல்லா, விமல் வீரவன்ச மற்றும் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோரே இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீமுக்கும் கட்சித் தலைவர் அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate