கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட ரூ.25 மில்லியன் தேர்தல் ‘லஞ்சம்’
வெள்ள நிவாரணத் திட்டம் எனும் பின்னணியில் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாக கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப்படுவதற்காக ரூ.25 மில்லியன் ப...
http://kandyskynews.blogspot.com/2015/01/25.html?m=0
வெள்ள நிவாரணத் திட்டம் எனும் பின்னணியில் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாக கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப்படுவதற்காக ரூ.25 மில்லியன் பணம் பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்பணம் நிவாரணம் எனும் போர்வையில் தேர்தல் கால கொடுப்பனவாக விநியோகிக்கப்படவிருந்த நிலையில் பணத்தைப் பெற்றுக்கொண்ட மூன்று இராணு உயரதிகாரிகள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைக்க மறுத்ததனால் பண விநியோகம் தடைப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வேண்டுகோளுக்கிணங்க வெலிகந்த மக்கள் வங்கிக் கிளையில் இப் பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட்டு அவை முறையே திருகோணமலை (13 மில்லியன்), புனானை (5 ம்லிலியன்), அம்பாரை (1 மில்லியன்) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரிகேடியர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் மேலும் 6 மில்லியன் தொடர்ந்தும் அதே வங்கிக் கணக்கில் காணப்படுவதாகவும் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
தமக்கு வாய்மூலம் விடுக்கப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்த குறித்த இராணுவ அதிகாரிகள் எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைக்கும் படி மேஜரிடம் தெரிவித்ததையடுத்தே இம் முயற்சி தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிகேடியர்கள் ரோஹித தர்மசிறி, தர்ஷன ஹெட்டியாராச்சி, ரோஹன பண்டார ஆகிய மூன்று உயரதிகாரிகளே இம்முயற்சிக்குத் துணை போக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate