மேலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்யத் தீர்மானம்
அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளிய...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_63.html?m=0
அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்தி அமைச்சு பதவிகள் பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு இராஜினாமா செய்யவுள்ளனர்.
ராஜினாமா தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர்களிடம் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த அமைச்சர்களுக்கு வாக்களித்தவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு காரணமாக இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு தங்கள் மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

