சிறந்த எதிர்காலம் உருவாக்கம் - பிரதமர்
அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பத்தை உருவாக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் மலையக தொழி...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_581.html?m=0
பண்டாரவளையில் மலையக தொழிலாளர்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தின் காணி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.
இதில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
1980 ஆண்டு முதல் கல்வி அமைச்சர் என்ற வகையில் மலையக பாடசாலைகளை தாம் பொறுப்பேற்றதன் அடிப்படையில், மலையத்தில் உள்ள தமிழ் மாணவர்கள் கலைத்துறைக்காக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்றனர்.
ஆனால் விஞ்ஞானத்துறையில் மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்றவர்களின் எண்ணிக்கை மிகவும் அரிதாகியுள்ளது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கான ஏழு பேர்ச் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று பண்டாரவளை மாநகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்னன், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

