மஹிந்தவே பிரதமராக நியமிக்கப்படுவார்!– சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_190.html?m=0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்படுவார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் பிரதமராக நியமிக்கக் கூடிய அதிக தகுதியுடையவர் மஹிந்த ராஜபக்சவேயாகும்.
பிதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கூட்டமைப்பில் அதிகளவானவர்களும் மஹிந்தவையே பரிந்துரை செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளா அறிவிக்கப்பட மாட்டார்.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய தேர்தலின் பின்னர் பிரதமர் நியமிக்கப்படுவார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடையவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடைய ஒருவரை பிரதமராக நியமிக்க முடியாது என எவராலும் கூற முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் உரையானது, கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் மீள ஒன்றிணைத்துள்ளது என சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, குமார வெல்கம, ஜோன் செனவிரட்ன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேற்று கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate