12 வயது சிறுவன் மூலம் குழந்தை பெற்ற பெண்: 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிபதி
அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் மூலம் கருத்தரித்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நக...
http://kandyskynews.blogspot.com/2015/07/12-6.html?m=0

அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் மூலம் கருத்தரித்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 36 வயதாகும் பெண் ஒருவர் தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, மகளோடு படிக்கும் சகமாணவனையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த பழக்கம், அந்த சிறுவன் 12 வயதை அடைந்தபோது அது காமப்பாதையில் பயணித்துள்ளது.
அச்சிறுவனோடு பலமுறை உடலுறவு கொண்ட அப்பெண், அவன் மூலம் ஓரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது அச்சிறுவனுக்கு 14 வயதாகிறது, இந்த விடயம் அச்சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, தங்களது மகனின் குழந்தை பருவத்தை சீர்குலைத்துவிட்டதாக பொலிசில் புகார் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அப்பெண் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜேன் பாட்ரிக், தனது மகன் போல் கருத வேண்டிய சிறுவனை, உடல் சுகத்திற்காக பயன்படுத்தி, அச்சிறுவனை சிறுவயதில் தந்தையாக்கிய குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate