போர்க்குற்றவாளி கோத்தபாயவை கைது செய்ய நடவடிக்கை
பல மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_27.html?m=0

பல மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ரத்னலங்கா மற்றும் அவன்காட் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யாரென்பது தொடர்பில் விரைவில் தெரிய வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைது செய்யத் தயங்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பலாலி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நே்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
ரத்னலங்கா மற்றும் அவன்காட் ஆகிய பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்துவரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது யார்? பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட ரத்னலங்கா நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த பணத்துக்கு என்ன நடந்தது? என்பன இதன்மூலம் தெரியவரும். இந்த விடயமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்வீர்களா? எனக் கேட்டப் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்; ஆம் அவர் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித பதவி தராதரத்தையும் பார்க்காது கைது செய்வோம் என்றார்.


Sri Lanka Rupee Exchange Rate