முஸ்லிம் காங்ரஸின் இரண்டு அமைச்சர்கள் வாக்களிக்காது புறக்கணிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதா...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_99.html?m=0
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் ஈடுபடாது தவிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் வாக்கு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையிலும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் வாக்கு ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் பதிவுசெய்யப்பட வேண்டியிருந்தபோதிலும் இவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரவில்லை.
இறுதிக்காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது.
இதையடுத்து பஷீர் சேகு தாவூத் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். எனினும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் எவரும் தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை. அத்துடன் குறித்த அமைச்சர்கள் எவரும் தேர்தல் பிரசாரத்திற்கான எந்தவொரு பணியிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate