அமெரிக்க கிரீன் கார்டுக்கே இன்ரர் போல் பொலிசார் பிடியாணையா ? அதிர்ச்சி தரும் தகவல் !

வெளிநாடுகளில் வாழும் புலிகள் ஆதரவாளர்களுக்கு, சட்டத்திற்கு புறம்பான முறையில் இன்ரர் போல் பிடியாணை பிறப்பித்தது மகிந்தவின் அரசு. இதற்கு காரணம...

294027வெளிநாடுகளில் வாழும் புலிகள் ஆதரவாளர்களுக்கு, சட்டத்திற்கு புறம்பான முறையில் இன்ரர் போல் பிடியாணை பிறப்பித்தது மகிந்தவின் அரசு. இதற்கு காரணமாக அமைந்தவர் கோட்டபாய ராஜபக்ஷ. தற்போது இந்த குடும்பத்திற்கே போறாத காலம் ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் மகிந்தவின் சகோதரர் மற்றும் முன் நாள் அமைச்சர், பசில் ராஜபக்ஷ தனது மனைவியைக் கூட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பி அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்கு அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளது. ஆனால் அவரது அமைச்சரவை வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாவைக் காணவில்லை, என்று வங்கியின் மனேஜர் கூறியுள்ளார்.

“திவி நெகுமா” என்ற திட்டத்தின் கீழ் பல மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளார் பசில். இதனை தற்போது கையில் எடுத்துள்ள ஜே.வி.பியினர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்து நீதிமன்றில் ஆஜராகவெண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக சர்வதேச பொலிசாரின்(இன்ரர் போல்) பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். இது தொடர்பாக ஜெ.வி.பி யினர் , குற்றத்தடுப்பு பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆழும் கட்சியில் முக்கிய தோழமை கட்சியாக தற்போது ஜே.வி.பி உள்ளது. இதனால் இவர்கள் எடுக்கும் முடிவுகளை மைத்திரி மற்றும் ரணில் ஆதரித்து வருகிறார்கள்.

சட்டமா அதிர்பரின் ஆலோசனை பெறப்பட்ட பின்னர், பசில் ராஜபக்ஷவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படலான் என்று நம்பப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரி ஆகியோர் இப்பிரச்சனைகளை ஏப்பிரல் மதம்(தேர்தலுக்கு பின்னர்) நடவடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை ஜே.வி.பி கட்சி விட்டபாடாக இல்லை.

Related

இலங்கை 216100872124585137

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item