குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது; ம.சுமந்திரன்
நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_285.html?m=0
நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனவரி 08ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான, தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு, பருத்தித்தறை நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) மாலை நகரசபை தவிசாளர் சபா.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றபோதே, சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சகல அதிகாரங்களையும், நாடாளுமன்றத்தின் சகல அதிகாரங்களையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டிருந்தது.
சுயாதீனமாக செயற்படக்கூடிய நீதித்துறையையும் தன் கையில் வைத்துக்கொண்டும், முக்கிய அதிகாரங்களுடைய அமைச்சுப் பதவிகளையும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிக் கொண்டு சர்வாதிகார குடும்ப ஆட்சியை ராஜபக்ஷ நடத்தி வந்தார்.
மக்களின் கணிகளை அபகரிப்பதுடன் அதிகளவான இராணுவ பிரசன்னத்தை எங்களுடைய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்த இந்த அரசாங்கம், மேல் மாகாணத்திலுள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் அதே நிலைமையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் விரக்தியடைந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து பொது எதிரணி மூலம் பலமான ஒரு கட்சியை உடைத்து தேர்தலில் வெற்றியும் கிடைத்து, குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது எனறார்.


Sri Lanka Rupee Exchange Rate