கொள்ளையர்களைப் பிடிக்க அமெரிக்கா செல்லும் மங்கள!
மஹிந்தவின் ஆட்சி காலத்தில் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சொத்துக்களை கண்டுபிடிக்க நடவடிக்கை ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_820.html
இதற்கான உலக வங்கியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான உதவிகயை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார். இதற்காக மங்கள வொஷிங்டன் செல்லவுள்ளார்.
அடுத்த வாரம் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருடன் செல்லும் மங்கள, இது குறித்து உலக வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வருடத்திற்கு 2000 கோடி டொலர் முதல் நான்காயிரம் டொலர்கள் வரை இவ்வாறு மோசடியான முறையில் வெளிநாடுகளில் பதுக்கப்படுவதாக உலக வங்கி நடத்தியுள்ள விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

