விமான அறையிலிருந்து கசிந்த தீப்பொறி: விமான இறக்கையில் பயணிகளை நிற்க வைத்த பரிதாபம்
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_429.html
அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது.
மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர்.
இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர்.
வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்தின் இறக்கையில் நிறுத்தி வைத்துவிட்டு, தீப்பொறியை அணைத்து பெரும் ஆபத்து நிகழ்வதற்குள் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீப்புகை விமானத்தில் மட்டுமல்லாமல் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகளையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.
இது குறித்து பேசிய Jacquelyn Jones என்ற பயணி, தீப்புகையால் எழுந்த துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை என்றும் விமான இறக்கையில் நிற்க வைத்ததும் பெரும் அவதிக்கு உள்ளாக்கியது என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து பேசிய விமான அதிகாரி ஒருவர், பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களின் முதல் குறிக்கோள். எனவே, விமான அறைக்குள் தீப்புகை வெளியேறியதால் அதிலிருந்த காப்பற்றவே பயணிகளை இறக்கையில் நிற்க வைத்ததாக கூறினார்.
இதே விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திரும்ப செல்ல பயணிகள் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்தனர்.
விமானம் சுமார் 5 மணி நேரங்கள் தாமதமாக புறப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 50 டொலர்கள் மதிப்பிலான கூப்பன்களை விமான அதிகாரிகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.