அமைச்சரைச் சீற்றம்கொள்ள வைத்த செய்தியாளரின் இனவாதம்!
இது சிங்களவர்களுடைய நாடு அல்ல.இந்த நாடு தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமானதென நீதியமைச்...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_84.html
இது சிங்களவர்களுடைய நாடு அல்ல.இந்த நாடு தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமானதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை மற்றும் அதன் பின்னணியில் இடம்பெற்ற யாழ். கட்டிடத் தொகுதி தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளி க்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள நாட்டில் எந்தவொரு சிங்களவரும் நீதிமன்றத்திற்கு எதிராக செய்யாத செயலை யாழ்ப் பாணத்தில் தமிழர்கள் செய்துள்ளார்கள். அவர்களுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பீர்களென குறித்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்த அமைச்சர், செய்தியாளரான உங்களது கேள்வியே இனவாத ரீதியானது என்று கூறியதன் பின்னரே மேற்படி விளக்கத்தையளித்தார்.
இது சிங்களவர்களுடைய நாடு என்பது தவறான அபிப்பிராயம். அவ்வாறு எங்கும் எழுதி வைக்கவில்லை. இது அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு ஆகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலம் கிடைத்ததும் ஆத்திரமடைந்த மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்காக வழங்கக்கூடிய ஆகக்கூடிய தண்டனையாகவே 130 பேரை கைது செய்துள்ளோமென்றும் அமைச்சர் விஜயதாச கூறினார்.