மத வெறியின் உச்சக்கட்டம்: நபரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த பெண்
அமெரிக்காவில் இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_71.html
இந்தியாவைச் சேர்ந்த சுனந்தோ சென் (46) என்ற நபர், நியூயோர்க் நகரில் உள்ள க்வீன்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கொலம்பியா பல்கலைக்கழகம் அருகே சொந்தமாக அச்சகம் வைத்து நடந்தி வந்த அவர் திருமணமாகாதவர்.
பெற்றோரையும் இழந்த அந்த நபர் க்வீன்ஸ் பகுதியில் சிறிய குடியிருப்பு ஒன்றில் நண்பர்களுடன் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், 27ம் திகதி அன்று காலையில் நியூயோர்க் நகர ரயில் நிலையத்தில் அவர் ரயிலுக்காக காத்திருந்த போது ரயில் வரும்போது எரிகா மெனன்டெஸ் (33) என்ற அமெரிக்க பெண் ரயிலில் தள்ளிவிட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சென் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் எரிகாவை கைது செய்துள்ளனர்.
பின்னர் பொலிஸ் விசாரணையில் அவர் தனக்கு இந்துக்களும், முஸ்லீம்களும் பிடிக்காது என்றும், 9/11 தாக்குதலுக்கு பிறகு இந்துக்களையும், முஸ்லீம்களையும் காயப்படுத்த விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த க்வீன்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி கிரகரி லசாக் எரிகாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.