16 கட்சிகள், 99 சிவில் அமைப்புடகளுடன் இணைந்து தேர்தல் களத்தில் குதிக்கிறது ஐதேக!
நாடாளுமன்றத் தேர்தலில் பலமானதொரு கட்சியாகக் களமிறங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டிவருக...
http://kandyskynews.blogspot.com/2015/05/16-99.html
நாடாளுமன்றத் தேர்தலில் பலமானதொரு கட்சியாகக் களமிறங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஓர் அங்கமாக சிறிய அரசியல் கட்சிகளுடனும், சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுடனும் அக்கட்சி பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய கட்சித் தலைமையகத்தில் தொடர் சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் நடைபெற்ற பேச்சுகளையடுத்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு 16 அரசியல் கட்சிகளும், சிவில் உட்பட 99 அமைப்புகளும் முன்வந்துள்ளன. இவ்வாறு ஆதரவு வழங்கியுள்ள தரப்புகளின் சார்பில் ஓரிரு வேட்பாளர்கள் ஐக்கிய கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கலாம் எனவும், சிலருக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஐ.தே.கட்சியால் எம்.பி. பதவி வழங்கப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலைய மக்கள் முன்னணி ஆகிய சிறுபான்மையினக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின்கீழ் போட்டியிடவுள்ளன. இதற்கான பேச்சுகள் சபை கலைப்புக்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், கட்சியின் கீழ்மட்டத்திலான அரசியல் செயற்பாட்டாளர்களை கொழும்புக்கு அழைத்து, பிரசார பொறிமுறை சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளது. தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்திலிருந்தே தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.