சிறுமியை அடகு வைத்து “எஸ்கேப்” ஆன தாத்தா: அரவணைத்த பணியாளர்கள்

சீனாவில் குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டு மாயமான முதியவரால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் மிகவும் பிரபலமான பாத் ஹவு...

சீனாவில் குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டு மாயமான முதியவரால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மிகவும் பிரபலமான பாத் ஹவுஸ் எனப்படும் குளியல் கூடங்களுக்கு ஏராளமானோர் வருவது வழக்கம்.

நீரை சூடேற்றும் வசதி இல்லாத பல குடும்பத்தினர்கள் இந்த பாத் ஹவுஸுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இது போன்ற ஒரு பாத் ஹவுஸூக்கு தன் பேத்தியுடன் வந்த முதியவர் ஒருவர் தான் வெந்நீர் குளியல் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் எனவும் அங்குள்ள பணிப்பெண்ணை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்பின் பணம் கொடுக்கும் வேளையில் திடீரென தன் பணப்பையை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த குளியல் கூடத்தின் உரிமையாளர் மீ வாங், அவரது பேத்தியை நம்பிக்கைக்காக விட்டு செல்ல கூறியுள்ளார்.

அதற்கு சம்மதித்த முதியவர் தன் பேத்தியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டுக் கிளம்பியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு ஒரு மாதமாகியும் அவர் திரும்பி வராததால், அச்சிறுமி அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அவளை செல்ல குழந்தையாக ஏற்றுக் கொண்ட அங்கிருந்த பணியாளர்கள் அவளுக்கென்று ஒரு சின்ன கட்டிலை பணியாளர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

மேலும் அவளுக்கு ஒரு தொலைக்காட்சியை கொடுத்ததுடன், உணவும் அளித்து பராமரித்து வருகின்றனர்.

இச்செய்தி பத்திரிகையில் வெளியானதால் சில தன்னார்வலர்களும் அவளது தாத்தாவை தேடி வருகின்றனர். எனினும் அவரை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை என கூறப்படுகிறது.

Related

உலகம் 1614907568420021575

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item