’அமெரிக்காவின் சொந்த மண்ணில் மோசமான பேரழிவை ஏற்படுத்துவோம்’ - வடகொரியா மிரட்டல்
அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் மோசமான பேரழிவை ஏற்படுத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரிய ஜனாதிபதி கிம்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_69.html
அமெரிக்காவை அதன் சொந்த மண்ணில் மோசமான பேரழிவை ஏற்படுத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ”அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இறுதி தண்டனையைச் சந்திப்பீர்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போர்ச் சூழலை கொளுத்தி போட்டு அதனை தீவிரப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்கிறது.
வட கொரியாவின் பலத்தை வீழ்த்த அனைத்து வழியிலும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இது போன்ற மிரட்டலால் ஏகாதிபத்தியவாதிகளாக இருக்க விரும்பும் அமெரிக்காவுடன் உடன்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏதும் இல்லை.
தாதாவாக வலம் வரும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை ஏற்படுத்த எப்போதும் வட கொரிய மக்களும் ராணுவமும் விரும்பவில்லை. அமெரிக்க வரலாற்றின் கடைசிப் பக்கங்களை எழுதப்போவது வட கொரியாவாகத்தான் இருக்கும். அமெரிக்காவின் சொந்த மண்ணில் மோசமான விளைவை ஏற்படுத்துவோம்.
இதற்காக தரைவழி, வான்வழி, கடல்வழி, கடலுக்குகீழ், அணுசக்தி தாக்குதல், சைபர் மோதல் என எந்த வகையிலான தாக்குதல்களையும் நாங்கள் அமெரிக்கா மீது நடத்த தயாராக இருக்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் வெளியிட்ட திரைப்படம் தொடர்பாக ஆரம்பித்த இந்த பிரச்சனை எப்போது முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை. வடகொரியா, அமெரிக்க அதிபர்கள் மாறி மாறி இதுபோன்ற பேச்சுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.