இஸ்ரேல் -காஸா யுத்தம்: ஐநா விசாரணைக் குழுவின் தலைவர் விலகினார்

கடந்த ஆண்டில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல்  காஸா மீது படுபயங்கர  தாக்குதல்களை மேற்கொண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை படுகொலை செய்திருந்தது .  ...

images (2)கடந்த ஆண்டில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல்  காஸா மீது படுபயங்கர  தாக்குதல்களை மேற்கொண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை படுகொலை செய்திருந்தது .  இஸ்ரேல்-காஸாயுத்தம் குறித்து விசாரணை நடாத  ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்தது இதன் தலைவராக வில்லியம் ஸ்கபஸ் என்பவர் நியமிக்கப்பட்டார் .

விசாரணை முடிவுகள் தமக்கு  பாதகமாக வரும் என்பதை கொண்டுகொண்ட சியோனிச இஸ்ரேல் விசாரணைக் குழுவின் தலைவர்    வில்லியம் ஸ்கபஸ் பக்கச்சார்பானவர் என  குற்றசாட்டை கிளப்பிவிட்டுள்ளது . இஸ்ரேலின்  குற்றம் சாட்டியதை அடுத்து வில்லியம் ஸ்கபஸ் பதவி விலகியுள்ளார். கனடா நாட்டு நிபுணரான ஸ்கபஸ் சிறந்த  என அறியப்பட்டவர் என அவரின் தொழில் சகாக்கள் தெரிவித்துள்ளனர் .

விசாரணைக் குழு கண்டறிந்திருக்கும் விடயங்களை இந்த குற்றச்சாட்டு பாதிக்கக்கூடும் என்பதால் தாம் உடனடியாக பதவி விலகுவதாக ஸ்கபஸ் விசாரணைக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காஸா  யுத்தம் குறித்த விசாரணைக் குழு அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் நியமித்த மூவர் குழுவி லேயே ஸ்கபஸ் தலைமை வகித்திருந்தார். ஏற்கனவே ஐ.நா. குற்றவியல் நீதிமன்றமும் பலஸ்தீன நிலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு குறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் ஸ்கபஸின் வெளியேற்றம் தீர்க்கமானதாக கருதப்படுகிறது.

இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு பீ.எல். ஓவுக்கு சட்ட ஆலோசனை ஒன்று குறித்து உதவியதாகவும் அதற்காக தாம் 1,300 டொலர்களை பெற்றதாகவும் வில்லியம் ஸ்கபஸ் தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் இது ஏனைய அரச மற்றும் அமைப்புகளுக்கு தாம் வழங்கிய ஆலோசனைகளில் இருந்த மாறுபட்டதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

உலகம் 470014378156179102

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item