கடும்போக்குவாத சக்திகள் தலைதூக்குவதற்கு இடமளிக்காது செயல்பட வேண்டும்: நிமல்
கடும்போக்குவாத சக்திகள் தலைதூக்குவதற்கு இடமளிக்காது அனைத்து இன , மத பிரிவினருக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுதுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_37.html
கடும்போக்குவாத சக்திகள் தலைதூக்குவதற்கு இடமளிக்காது அனைத்து இன , மத பிரிவினருக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுதுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒற்றுமை, அடிப்படை வசதிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பதற்காக எவ்வித பேதமும் இன்றி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்றிட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள அனைவரும் உறுதிபூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள அனைவரும் உறுதிபூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்