ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போன ஆபிரகாம் லிங்கன் தலை முடி

வாஷிங்டன் ,பிப்.06 (டி.என்.எஸ்) அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் தலாய் முடி ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போனது. அமெரிக்காவின்...

downloadவாஷிங்டன் ,பிப்.06 (டி.என்.எஸ்) அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் தலாய் முடி ரூ.15 லட்சத்திற்கு ஏலம் போனது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கடந்த 1865-ம் ஆண்டு, ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட சிறிது நேரத்தில், அவரது தலையில் இருந்து மயிர்க்கற்றையை டாக்டர் ஜோசப் பர்னஸ் என்பவர் நீக்கினார்.

இந்த மயிர்க்கற்றை மற்றும் ஆபிரகாம் லிங்கனுடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களை தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாத்து வருகிறது. மறைந்த லிங்கனின் தனியார் நினைவகமாக கருதப்படும் இந்த நிறுவனம், சமீபத்தில் லிங்கனின் மயிர்க்கற்றையை ஏலம் விட்டது. அத்துடன் அவரை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத்துடன் தொடர்புடைய பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

இந்த பொருட்கள் அனைத்தும் சுமார் ரூ.5 கோடிக்கு ஏலம் போயின. குறிப்பாக லிங்கனின் மயிர்க்கற்றை 25 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.15 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆனால், அதிக விலை கொடுத்து ஆபிரகாம் லிங்கனின்  மயிர்க்கற்றையை வாங்கியவரின் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

Related

உலகம் 435341203702905104

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item