சண்டித்தனமான பிக்குகளால் அரசின் சிறுபான்மை வாக்குகள் உடைந்துள்ளன -வாசுதேவ
சண்டித்தனமான பௌத்த தேரர்களினால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்குஈடுசெய்ய முடியாத நட்டம் ஏற்பட்டதாக தேசிய மொழிலாகளர், சமூக ஒருங்க...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_63.html
கடும்போக்குவாதமான பொதுபல சேனா போன்ற அமைப்புக்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறான அமைப்புக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கியதை அடுத்து சிறுபான்மை மக்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்களை தாம் எப்போதும் ஏற்றுக்கொள்வதோ, ஊக்குவிப்பதோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி இன்னுமொரு தரப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.(sm)