நிகாப் அணியும் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க செல்லும்போது: மேலதிக தேர்தல் ஆணையாளர்

முகத்தை மறைக்கும்  நிகாப்  அணியும் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடிகளில் கடமையிலுள்ள பெண் தேர்தல் அதிகாரிகளிடம் தமது த...

nikab




முகத்தை மறைக்கும்  நிகாப்  அணியும் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடிகளில் கடமையிலுள்ள பெண் தேர்தல் அதிகாரிகளிடம் தமது தேசிய அடையாள அட்டையுடன் தமது முகத்தைக்காட்டிய பின்னர்  அவர்களுக்கு வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்படும், எனவே  இத்தகைய நிகாப்  அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் இந்த தேர்தல் சட்டங்களுக்கிணங்க நடந்து கொள்ளுமாறு  மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கேட்டுக்கொள்கிறார்.

இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் போது ஒவ்வொருவரும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் போது இதேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை இவற்றுள் ஏதாவதொன்றை எடுத்துச்செல்ல வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்

அவ்வாறு செல்லாதோருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர்  அறிவித்துள்ளார்

Related

இலங்கை 2582347985052727099

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item